தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் வடக்கில் புதிய கூட்டணி உதயம்!

Sunday November 12, 2017

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர் கொள்ள உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தமிழர் அரசியல்   நடவடிக்கையில் புதிய  மாற்றமாக  தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு இணைந்த  அனைத்து சிவில் சமூக  பொது அமைப்புக்களின் ஆதரவுடனும் பக்க  பலத்துடனும் உருவாகும்  எனவும் தொிவித்துள்ளார்.