தமிழ் மாணவனுக்கு ஜப்பான் கௌரவிப்பு!

வியாழன் மார்ச் 09, 2017

திடீரென வரும் மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற 10ஆம் வகுப்பு மாணவனை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது மாளிகைக்கு அழைத்து கௌரவப்படுத்தியுள்ளார்.

அத்துடன், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த அறிவியல் பல்கலைக்கழகமும் மனோஜினை அங்கு அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது. மாணவன் மனோஜ் கண்டுபிடித்த கருவியினால் எதிர்காலத்தில் பல உயிர்கள் காக்கப்படுவதோடு பெரும் பொருளாதாரச் செலவையும் மிச்சப்படுத்த முடியும்.

இதுகுறித்து மாணவன் மனோஜ் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு நாள் எனது தாத்தாவிற்கு திடீர் என மாரடைப்பு வந்து நிலை தடுமாறி சுயநினைவை இழந்தார். அது தான் என்னை இந்த கருவியை கண்டுபிடிக்க தூண்டியது.

இந்த கருவி மூலம் எந்த அறிகுறியும் இன்றி திடீர் என வரும் மாரடைப்பை முன் கூட்டியே கண்டுபிடிக்க முடியும்’ என மாணவர் மனோஜ் தெரிவித்துள்ளார்.