தமிழ் வஞ்சிக்காது வாழ வைக்கும்!

Monday June 04, 2018

அண்ணா துவங்கி திராவிட இயக்க தலைவர்கள் பலரும் தமிழுக்கு, தமிழ் இலக்கியத்திற்கு செய்துள்ள பங்களிப்பினை நாம் நீண்ட பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். சாமானியர்களிடத்திலும் தூயத்தமிழ் பேசி தங்களது இயக்கத்தை வளத்தவர்கள் அவர்கள். அந்த வகையில் திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் தேர்ந்த தமிழ் மொழியாளுமை உள்ளவர் என்றால் அதில் மிகையேதுமில்லை.

இக்கட்டான நேரங்களிலும் எதுகை, மோனைகளில் பதிலளித்து எதிர்புறம் உள்ளவர்களை அசரடிக்கும் வல்லமை வாய்ந்தவர் அவர். அத்தகைய கலைஞரின் மொழியாளுமை உணர்த்தும்  ஒரு  நிகழ்வை காணலாம்   "விதவை என்று எழுதுகிறேன்.

 எழுத்தில் கூட பொட்டு வைக்க முடியவில்லை. சமுதாயம் மட்டும் அல்ல‌  மொழியும் உங்களை வஞ்சித்து விட்டது.."  என்றதோர் கவிதை முன்னணி தமிழ் வார இதழ் ஒன்றில் (1985) வெளியாகியிருந்த போது, அதனை விமர்சித்து பதிலளித்த கலைஞர்  "விதவை" என்பது வட‌மொழிச் சொல்..  தமிழ்மொழியில் "கைம்பெண்" என்று எழுதினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம் தமிழ் வஞ்சிக்காது வாழ வைக்கும்.   என பதிலளித்தது தமிழ் மீதான கலைஞரின் பற்றினையும், மொழியாளுமையும் வெளிப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.