தரமணி படமல்ல; அழியாத தடம்

January 06, 2017

தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தைப் பாராட்டி ட்விட்டரில் எழுதியுள்ளார் கவிஞர் வைரமுத்து. அவர் கூறியதாவது: இயக்குநர் ராம் இயக்கும் தரமணி படத்தின் வெள்ளோட்டமும் சில பாடல்களும் பார்த்தேன். தமிழுக்கு மற்றுமோர் அழுத்தமான படைப்பாக இது அமையலாம். 

வசந்த்ரவி என்ற அற்புதமான புதுமுகக் கலைஞன் கிடைத்திருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவின் இன்னுமோர் உயரம் இது. நா.முத்துக்குமாரின் இறவாத வரிகள் அவன் இறந்திருக்கக்கூடாது என்று சொல்லவைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பேசப்படுவார். ராம் படைப்புகளுள் இதுவும் ஒரு படமல்ல; அழியாத தடம். வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.