தரவுகளைப் பாதுகாக்க!

Wednesday February 21, 2018

மாறுபட்ட தேடியந்திரமான டக்டக்கோவை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையவாசிகள் தேடலில் ஈடுபடும்போது அவர்கள் என்ன தேடுகின்றனர் என்பது போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்காமல் இருப்பது இந்த தேடியந்திரத்தின் தனிச்சிறப்பு. விளம்பர நோக்கில் இணையவாசிகளின் தேடல் சுவடுகளைப் பின்தொடராமல் தனி உரிமைப் பாதுகாப்பை முக்கிய அம்சமாக முன்வைத்து மாற்று தேடியந்திரமாக உருவான டக்டக்கோ இப்போது, இணையத்தில் உலவும்போது தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க உதவும் செயலியை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

டக்டக்கோவின் இந்தச் செயலியை செல்போனில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால், இணையதளங்கள், விளம்பர நிறுவனங்கள் இணையவாசிகளை பின்தொடர்வதை தவிர்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன், ஆண்ட்ராய்டு போன் மற்றும் கூகுள் கிரோம் நீட்டிப்பாகவும் இதைப் பயன்படுத்தலாம். தகவல்களுக்கு: https://duckduckgo.com/app