தர்மசங்கடத்திற்குள்ளாக்கிய சச்சி!

Thursday November 08, 2018

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதிக்கான பாலதேசாபிமானி விருதுவிழாவில் அரைக் காற்சட்டையுடன் பங்கெடுத்து அவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளார் ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன். 

ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒழுங்கமைப்பில் இந்து பௌத்த கலாச்சார மத்திய நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட விருதுவழங்கல் மற்றும் வறிய மக்களிற்கான உதவி வழங்கும் நிகழ்வு பலாலி படைத்தளத்தில் நடைபெற்றிருந்தது.இந்நிகழ்விற்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த போதே ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் அரைக்காற்சட்டையுடன் கலந்துகொண்டு சிங்கள இராணுவத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் இன்று குறித்த சர்வமத அமைப்புக்களின் ஏற்பாட்டில் பலாலியில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்விலேயே இந்து மதத்தலைவராக பங்கெடுத்த வேளை அரைக்காற்சட்டை மற்றும் ரீசேட்டுடன்  சிவசேனை அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம்  கலந்துகொண்டு அவர்களை தலைகுனிய வைத்துள்ளார்.