தற்­கா­லிக வீடு­கள் கூட இல்லாத கோயில்­காடு மக்­கள்!

செவ்வாய் ஏப்ரல் 17, 2018

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக தற்­கா­லிக வீடு­கள் கூட இன்றி மிக­வும் மோச­மான நிலை­யில் வாழ்ந்து வரு­வ­தாக இத்­தா­வில் கோயில்­காடு மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பில் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தெரி­வித்­த­தா­வது:
கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வில் உள்ள கிரா­மமே இத்­தா­வில் கிரா­மம். குறித்த கிரா­மத்­தில் உள்ள ஒரு பகு­தியே கோயில்­காடு பகுதி. குறித்த பகு­தி­யில் பிர­தேச செய­ல­கத்­தால் அரை ஏக்­கர் காணி வழங்­கப்­பட்டு காணி இல்­லாத மக்­கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.

குடி­ய­ம­ர்த்­தப்­பட்ட மக்­கள் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக அங்கு வாழ்ந்து வரு­கின்­ற­ போ­தும் நாம் இருப்­ப­தற்கு தற்காலிக வீடு­கள் கூட வழங்­கப்­ப­ட­வில்லை.

இத­னால் நாம் பெரும் சிர­மத்­தின் மத்­தி­யில் வாழந்து வரு­கின்­றோம். தற்­கா­லிக வீடு­க­ளை­யா­வது இப்­போது தாருங்­கள், பின்பு நிரந்­தர வீடு­களை தாருங்­கள் என்று அதி­கா­ரி­கள் முதல் அர­சி­யல்­வா­தி­கள் அனை­வ­ரி­ட­மும் கேட்­டு­விட்­டோம்.
ஆனால் இது­வரை அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

கிரா­மத்­தில் உள்ள அர­ச­சார்­பற்ற நிறு­வ­ன­மான ஒரு நிறு­வ­னம் தற்­கா­லிக வீடு­களை வழங்­கு­தற்கு கடந்த ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன் அடிக்­கல் நட்­ட­போ­தும் இது­வரை அவர்­க­ளும் அந்த தற்­கா­லிக வீடு­களை வழங்­க­வில்லை.

நாம் மிக­வும் மோச­மான நிலை­யில் இங்கு வாழ்ந்து வரு­கின்­றோம். கிண­று­கள் இல்லை பிர­தேச சபை நீரினை வழங்கி வரு­கின்­றது. எமது வேண்­டு­கோளை உரிய அதி­கா­ரி­கள் கவ­னத்­தில் எடுக்க வேண்­டும் – என்­ற­னர்.

இது தொடர்­பாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பர­மோ­த­யன் ஜெய­ரா­ணி­யி­டம் கேட்­ட­போது,
‘‘பய­னா­ளி­கள் பட்­டி­யல் சேக­ரிப்பு முதல் இது தொடர்­பான அனைத்து வேலை­க­ளும் முடி­வ­டைந்து அனு­ம­திக்­காக மாவட்ட செய­ல­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. இது­வரை அதற்­கான அனு­மதி கிடைக்­க­வில்லை. கிடைத்­த­வு­டன் அவர்­க­ளுக்­கு­ரிய தேவை­கள் விரை­வாக செய்து கொடுக்­கப்­ப­டும்’’ எனத் தெரி­வித்­தார்.