தலை துண்டிக்கப்பட்ட கோழி 18 மாதங்கள் உயிருடன்!

March 31, 2018

அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட கோழி ஒன்று 18 மாதங்கள் உயிருடன் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள லராடோ நாட்டில் “ஹெட் லெஸ் சிக்கன்” என்ற விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜீன் மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் உள்ள ப்ரூடா நகரில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவிற்கு முக்கிய காரணம் மைக் என்ற கோழியாகும்.

அதிசய மைக் எனப் பெயரிடப்பட்ட கோழி தலை துண்டிக்கப்பட்ட பின்னரும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. ஒரு நாள் மைக்கின் உரிமையாளர் சமைப்பதற்காக அதன் தலையை துண்டித்துள்ளார். ஆனால் மைக் தலை துண்டித்த பின்னரும் உயிருடன் இருந்துள்ளது. இதனைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

கோழியின் மூளையின் முக்கிய பகுதி பாதிக்கப்படாமல் இருந்ததால் கோழி உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் கோழிக்கு உணவானது சிறிய குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உணவுக்குழாயில் உணவு சிக்காமல் இருக்க நீரானது சிரஞ் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 மாதங்கள் மைக் உயிரோடு இருந்து வந்துள்ளது.

18 மாதங்களுக்கு பிறகு உணவுக்குழலில் உணவு சிக்கி மைக் உயிரிழந்தது. மைக்கை நினைவுகூறும் வகையில் “ஹெட் லெஸ் சிக்கன்” விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் April 03, 2018

ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!

ஞாயிறு April 01, 2018

திரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. 

ஞாயிறு April 01, 2018

இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும்