தாயகம் திரும்பும் 74 ஈழ அகதிகள்!

April 20, 2017

இந்திய முகாம்களில்   இருந்த  ஈழ அகதிகள்  இந்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 20 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 16 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவினர் எதிர்வரும் 28ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் பல வருடங்களாக காலம் கழித்து வந்த ஈழ அகதிகள் இவ்வாறு நாடு திரும்பவுள்ளர் என கூறப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் புலம்பெயர்  ஈழ அகதிகளுக்கான   விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு ஆகிய செலவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
சனி April 29, 2017

திருச்சியில், இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த சிறுவனொருவன் நீரில் மூழ்கி மரணமானார். மரணமான சிறுவனின் பெயர் யு.ரோஹித் (12) என்று தெரியவந்துள்ளது.

சனி April 29, 2017

இன்றைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.