தாய்லாந்தின் சுற்றுலா தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்து -20 பேர் மாயம்

Thursday July 05, 2018

தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே இன்று மாலை 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மீட்கப்பட்டுவிட்டாலும் 20 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாக  அந்நாட்டு பேரிடர் துறை அறிவித்துள்ளது.