தாய்லாந்தில் நேற்று 15 இடங்களில் குண்டுவெடிப்பு!

April 21, 2017

தாய்லாந்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். தாய்லாந்தில் நேற்று ஒரே நாளில் 15 இடங்களில் கிரானைட் கையெறி குண்டுகள் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பொதுமக்கள் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

தாய்லாந்தின் எல்லை பகுதியான மலாய் படானி மண்டலத்திற்குட்பட்ட நராதிவாட் மற்றும் சாங்லா மாகாணத்தின் படானி பகுதியில் நேற்று இரவு சுமார் 7.30 மணி முதல் 8.30 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

இதில் ராணுவத்திற்கு சொந்தமான இடம், காவல் நிலையம் மற்றம் குடியிறுப்புப் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லையில் அத்துமீறிய மர்ம நபர்கள் பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த 2004 முதல் தாய்லாந்தில் முஸ்லீம்கள் அதிகளவில் வாழும் தெற்கு பகுதியில் புத்த மதத்தினரின் ஆட்சி நடந்து வருகிறது. எனவே பிரிவிணையை வலியுறுத்தி 2004-ஆம் ஆண்டு முதல் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் இதுவரை சுமார் 6,500 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

செய்திகள்