திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் நடிகராக அறிமுகமாகிறார்!

Wednesday January 09, 2019

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார்.

‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.