திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து!

February 18, 2018

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் மிகவும் பழமையான புராதன புத்தவிகார் என யுனெஸ்கோ அறிவித்த கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டின் தலைநகர் லாசாவில் மிகவும் பழமைவாய்ந்த புத்தவிகார் உள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஜோஹாங் கோயில் கடந்த 2000-ம் ஆண்டில் புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்நிலையில், நேற்று மாலை இந்த கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கவுதம புத்தர் தனது 12 வயதில் இருப்பது போன்ற சிலை இங்கு உள்ளது. மேலும், பல விலைமதிப்பு மிக்க அரிய பொருட்கள் இங்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

செய்திகள்