தியத்தலாவ விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம்; மூவர் காயம்

Thursday May 17, 2018

தியத்தலாவயில் உள்ள விமானப் படை பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கைக்குண்டு ஒன்று இன்று காலை 10.15 மணியளவில் வெடித்ததாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன கூறினார். விமானப் படையில் பணியாற்றும் பெண் ஒருவரும் இரண்டு வீரர்களும் காயமடைந்திருப்பதாக  கூறினார். 

காயமடைந்த மூவரும் தற்போது தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.