தியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

செவ்வாய் ஏப்ரல் 26, 2016

இலங்கை, இந்திய இராணுவஆக்கிரமிப்பினைஎதிர்த்துஉண்ணாநோன்பிருந்துதேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்ததியாகச்சுடர் அன்னைபூபதிஅம்மாஅவர்களின் 28வது ,நாட்டுப்பற்றாளர்கள்,மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்தஎழுச்சிவணக்கநிகழ்வானது24.04.2016 ஞாயிற்றுக்கிழமைஅன்றுநொசத்தல் மாநிலத்தில்மிகவும் உணர்வெழுச்சியுடன்நடைபெற்றது. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்கநிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்துமலர்மாலைஅணிவித்தலுடன் தியாகச்சுடர்  ,மாமனிதர்களுக்குதனித்தனிஈகைச்சுடர்களாகஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலிசெலுத்தப்பட்டசமவேளையில் தமிழர்கலைபண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன. 

தேசியவிடுதலைக்காகதம்மையேஅர்ப்பணித்தவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்கநிகழ்வில் அரங்கம் நிறைந்தநொசத்தல் மாநிலவாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டதுடன்,காணிக்கைநிகழ்வுகளாகஎழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன ,பேச்சுக்கள்,கவிதைகளும்இடம்பெற்றதுடன்காலத்திற்கேற்பகருப்பொருளைக் கொண்டசிறப்புரையுடன்,தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட மே18 தமிழினஅழிப்பைவெளிப்படுத்தும் வகையிலானஉணர்வுவெளிப்பாடானதுகலந்துகொண்டவர்களின் இதயங்களைஒருகணம் கனக்கச் செய்ததுடன் இசைக்குயில் 2016 நிகழ்வில் வரலாறுபிரிவில் முதலாமிடம் பெற்றுக் கொண்டமாணவர்கள் வழங்கியநிகழ்வானதுதாயகநினைவுகளைமீட்டுச்சென்றதும்குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியாகநம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்துதமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன்,தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

ஈழத்தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாதவலியாகமாறியதும்,சிங்களப் பேரினவாதஅரசினால் திட்டமிடப்பட்டுசர்வதேசநாடுகளின் அனுசரணையுடன் தமிழர்கள் மீதுநடாத்தப்பட்ட 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு மே18- முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்புநாளின் 7வது ஆண்டுவலிசுமந்தநினைவுகளைநெஞ்சினில் சுமந்துஎம் மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்திஉணர்வுடனும்,உறுதியுடனும் தமிழினஅழிப்பிற்குநீதிகேட்க 18.05.2016 புதன்கிழமைபேர்ண் பாராளுமன்றம் முன்பாகஒன்றுகூடத் தயாராகுமாறு இத்தருணத்தில் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு