தியாகி அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு வணக்கம்

April 18, 2017

தமிழ் மக்களின் உரிமை மற்றும் இந்திய சமாதானப் படையினரின் அடாவடித்தனங்களை நிறுத்துமாறு கோரி அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு வணக்கம்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை(19) மாலை 3.00மணிக்கு நாவலடி அன்னைபூபதி கல்லரை வளாகத்தில் இடம்பெறும்.இந்நிகழ்வில் மாலையணிவிப்பதோடு சமாதிக்கு தமிழ் தேசிய உணர்வாளர்களால் சமாதிக்கு மலரஞ்சலியும், நினைவுரைகளும் இடம்பெறும்.

இதேவேளை, நாளை நடத்தப்பட உள்ள அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுக்கு அனைத்து ஊடகவியலாளர்களையும் வருகை தருமாரு சிவில்சமூக அமைப்புகளின் இணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைத்தீவின் சிறந்த சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற கெரவத்தை அன்னை பூபதி அம்மையாருக்கு வழங்கும் முகமான அறிக்கை ஒன்றையும் மட்டக்களப்பு மாவட்ட  சிவில்சமூக அமைப்புக்களின் சார்பாக ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாக இணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் 

 

 

 

செய்திகள்