தியாகி திலீபன் தூபியில் அஞ்சலித்த உணர்வாளர்கள்!

Friday October 12, 2018

வட ஈழத்திற்கு வருகை தந்த ஈழ தமிழ் உணர்வாளர்கள் குழு இன்று தியாகி திலீபனின் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் கொண்ட குழுவே  அஞ்சலி செலுத்தியிருந்தது.

குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனையும் சந்தித்த பேசியிருந்தனர்.