தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு தடை விதிக்க ஆனோல்ட் யார்?

Wednesday September 19, 2018

தியாகி அண்ணன் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கவும் தடை விதிக்கவும் யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் இற்கு என்ன அருகதை இருக்கின்றது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

கடந்த வருடம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற போது, நினைவுத் தூபிக்கு சமீபமாக இன்சூரன்ஸ் கம்பனியின் களியாட்ட நிகழ்வில் திளைத்திருந்த அவருக்கு இப்போது எங்கிருந்து ஞானம் பிறந்தது? 

அரசியல் கட்சிகள் பலவும் கொள்ளை வேறுபாடுகளுடன் இருக்கின்றன. போட்டித்தன்மைகளுடன் இருக்கின்றன. இந்த நிலையில், பொது நினைவுக் குழு ஒன்றின் மூலம் திலீபன் அவர்களின் நினைவை நடத்துவது விரும்பத்தக்கது. 

அவ்வாறில்லை எனில், கட்சிகள் தனித்தனியே, தாங்கள் விரும்பிய நேரத்தில் நினைவேந்தலை நடத்த முடியும். அதை விடுத்து நினைவேந்தலுக்கு தடை விதிப்பதற்கு ஆனோல்ட் யார் என யாழ். குடாநாட்டு மக்கள் கேள்வி எழுப்பயிருக்கின்றனர். 

தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவரான ஆனோல்ட் இவ்வாறான நிலை எடுப்பது அவருக்கு தனிப்பட்ட ரீதியில் நல்லது அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி செயற்பட்டமை போன்று தற்போது தமிழரசுக் சட்சி செயற்படுகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.