தியாக தீபம் திலீபன் நினைவு வாரத்தை குழப்பும் இந்திய தூதரகம்!

Sunday September 23, 2018

வருடம்தோறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களை குழப்பும்விதமாக தியாக தீபம் திலீபன் நினைவு வாரத்தில் அகிம்மை தினம், காந்தி விழா என நல்லூர் வீதியிலுள்ள மண்படங்களில் நடத்திவரும் இந்திய துணைத்தூதரகம் இவ்வாண்டும் அதற்காக முழுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இலக்கியவாதிகள் எனக்கூறப்படும் ஈழவிரோத சக்திகள் சிலரைதூண்டிவிட்டு இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்திவரும் இந்தியத் துணைத்தூதரகம் இவ்வாண்டு தியாக தீபத்தின் நிகழ்வு வாரத்தில் நல்லூர் வீதியில் இந்திய கலைஞர்களை அழைத்து கம்பன் கழகத்துடன் இணைந்து இசை நிகழ்வுகளை தொடர்சியாக சில தினங்களாக நடத்திவந்தது.

எனினும் குறித்த நிகழ்வுகளுக்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டியிருக்காத நிலையில் பாரதி விழா எனும் பெயரில் விழா ஒன்றினை குறித்த நினைவு வாரத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் இந்திய துணைத் தூதரகம் நிகழ்வில் பங்பேற்பவர்களுக்கு இலவசமாக பாரதியார் புத்தகங்களை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது.