திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி 324 கி.மீ., மாணவர்கள் தொடர் ஓட்டம்!

வெள்ளி செப்டம்பர் 11, 2015

திராவிட இயக்க நூற்றாண்டு விழா - பேரறிஞர் அண்ணா அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செப்டம்பர் 15, 2015 இல் நடைபெறுகிறது. இம்மாநாட்டினை ஒட்டி திருச்சி மாநகர் தியாகச் செம்மல்கள் கீழப்பாñர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தொடங்கி திருச்சி மாநகர், புறநகர், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக 324 கி.மீ., தூரம் திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி கல்லூரி மாணவர்கள் தொடர் ஓட்டமாக வருகிறார்கள். இந்த சுடரினை செப்டம்பர் 15 காலை 10 மணிக்கு மாநாட்டு மேடையில் நான் பெற்றுக் கொள்கிறேன்.

 

இத்தொடர் ஓட்டத்தினை 2015 செப்டம்பர் 12 காலை 9 மணிக்கு ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி தொடங்கி வைக்கிறார். மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் தலைமை வகிக்கும் இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி க.சோமு, புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மருத்துவர் ரொகையா, மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர் பா.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

 

திருப்பூர் மாவட்டச் செயலாளர், மாநாட்டுத் தலைவர் ஆர்.டி.மாரியப்பன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் டி.என்.குருசாமி, கரூர் மாவட்டச் செயலாளர் பரணி கே.மணி, மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்கள் மணவை தமிழ்மாணிக்கம், சுமங்கலி செல்வராஜ், முஹம்மது சாதிக், மா.உமாபதி, ஆறு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் வைகோ பழனிச்சாமி, வழக்கறிஞர் கனகராஜ், கேசவன், அசோக்குமார், ஆர்.எÞ.கோவிந்தராஜன் மற்றும் ஈரோடு சோமு (துணை அமைப்பாளர்), மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தினர் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், அணிகளின நிர்வாகிகள் தொடர் ஓட்டத்தினை எழுச்சியுடன் வரவேற்க ஏற்பாடு செய்துள்ளனர்.

 

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் வாகனப் பிரச்சார பொறுப்பேற்று வருகிறார். கிராமியத் தென்றல் ஒரத்தநாடு கணேஷ் குழுவினரின் திராவிட இலட்சிய பாடல் நிகழ்ச்சிகள் சுடர் ஓட்ட வழிதடம் முழுவதிலும் நடைபெறும். திராவிட இயக்கச் சாதனை துண்டு பிரசுரங்களும் மாணவர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

 

திராவிட இயக்க இலட்சிய தாகம் கொண்ட மாணவக் கண்மணிகள் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்தினை வரவேற்று சிறப்பிக்குமாறும், மாநாட்டிற்கு வருகை தந்து பெருமை சேர்க்குமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 

‘தாயகம்’    வைகோ
சென்னை - 8    பொதுச்செயலாளர்,
11.09.2015    மறுமலர்ச்சி தி.மு.க