திருகோணமலையில் கிணற்றில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

August 12, 2017

திருகோணமலை, ஆனந்தபுரி, உப்புவௌி பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பிரதேசத்தில் பொதுக் கிணற்றில் மூழ்கி 16 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (11) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  திருகோணமலை, செல்வநாயகபுரம் இந்து மஹா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இன்று காலை பிரத்தியேக வகுப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் 06 நண்பர்கள் இணைந்து ஆனந்தபுரி பிரதேசத்தில் உள்ள பொதுக் கிணற்றுக்குள் இறங்கி நீராடியுள்ளனர். 

இவ்வாறு நீராடுவதற்காக கிணற்றில் குதித்தவர்களுள் இரண்டு மாணவர்கள் நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  உயிரிழந்தவர்கள் உப்புவௌி, வரோநகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் ஹேமாதரன் (16) மற்றும் ஆனந்தபுரி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் பவிராஜ் (16) என்று தெரிய வந்துள்ளது. 

உயிரிழந்த இருவரினதும் உடல்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர்   ஆரம்பித்துள்ளனர். 

செய்திகள்
வியாழன் March 22, 2018

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள