திருகோணமலையில் விபத்தில் இளைஞன் பலி!

Wednesday February 14, 2018

திருகோணமலை சீனன்குடா காவல் துறை பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிரே வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இரு டிப்பர் வாகனங்களுக்கு இடையில் சிக்குண்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஸ்தலத்திலேயே பலியானார். மூதூர்-5, பெரியபாலம் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட உம்முள் ஹசன் சப்ரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.