திருந்தாத குற்றவாளிகளைத் தூக்கில் இடுவதில் தவறில்லை: மல்கம் ரஞ்சித் ஆண்டகை

Thursday July 12, 2018

திருந்தத் தயாராக இல்லாமல் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தூக்கு மேடைக்குக் கொண்டுசெல்வதில் தவறில்லை என, கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர் ஒன்றை எம்மால் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் உள்ளனர். நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது. போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது.

அதேபோன்று சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்களும் உள்ளனர். 

குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல் அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை எனவும் காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.