திருமணத்தன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த புதுமண தம்பதி!

Wednesday November 07, 2018

அமெரிக்காவில் திருமணத்தன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த புதுமண தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த பியர்கட்ஸ் வில் பைலர். இவர் விவசாய என்ஜினீயரிங் படித்து வந்ததார். இவருக்கும், விவசாய தொலை தொடர்பு படித்து வந்த பைலி ஆக்கர் மேனுக்கும் திருமணம் நடந்தது.

அன்று இரவு இருவரும் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அது நடுவானில் பறந்துபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. அதில் 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் இருவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.