திருமுருகன் காந்திக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

August 11, 2018

வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், "திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார்? இத்தனை அவசரமாக ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது ? நீங்கள் கூறும் திருமுருகன் காந்தியின் பிரிவினைப் பேச்சுத் தொகுப்பு காணொளி  ஏன் 64 நாட்களாகியும்  நீதிமன்றம்  தாக்கல் செய்யவில்லை?" என்று அடுத்தடுத்து எழுப்பிய கேள்விகளுக்கு காவல் துறை  தரப்பில் பதில் இல்லை.

பெரியார் சிலைக்கு 2017-ம் ஆண்டு மாலை போட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மறுத்துவிட்ட பின்னர், வேறொரு வழக்கில் திருமுருகன் காந்தியைப் காவல் துறை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  "ஐரோப்பாவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசியதோடு, அது மத்திய- மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச் சூடு என்று இருநூறுக்கும் அதிகமானோர் குழுமியிருந்த உலக நாட்டு பிரதிநிதிகள் மத்தியில் பேசினார்.

திருமுருகன் காந்தி இப்படிப் பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது" என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறை குற்றச்சாட்டை முன் வைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், "திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார்? இத்தனை அவசரமாக ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது ? நீங்கள் கூறும் திருமுருகன் காந்தியின் பிரிவினைப் பேச்சுத் தொகுப்பு காணொளி ஏன் 64 நாட்களாகியும் காவல் துறை  தாக்கல் செய்யவில்லை?" என்று அடுத்தடுத்து எழுப்பிய கேள்விகளுக்கு காவல் துறை  தரப்பில் பதில் இல்லை.

இந்நிலையில், "திருமுருகன் காந்தியை ரிமாண்ட் செய்து  சிறைக்கு அனுப்ப முடியாது" என்று நீதிபதி பிரகாஷ் மறுத்ததோடு, "தேவையெனில் அவரிடம் நீங்கள் 24 மணி நேரம்வரை விசாரணை செய்து கொள்ளலாம்" என்று உத்தரவிட்டார். அதன்பேரில் நீதிமன்ற  திருமுருகன் காந்தியை, சென்னை மத்திய குற்றப்பிரிவுப் காவல் துறை, சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் இயங்குகிற பழைய கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணை முடிந்து, நேற்று மாலை 6.50 மணியளவில் அவர் வெளியில் வந்தார். அப்போது திடீரென்று கும்பலாக வந்த போலீஸார், திருமுருகன் காந்தியை வலுக்கட்டாயமாகத் துக்கிப்போய் காவல் துறை  வாகனத்தில் போட்டனர். அந்த வாகனம் எங்கு போகிறது என்றே தெரியாத நிலையில், ராயப்பேட்டை காவல் துறை , நேற்றிரவு திருமுருகன் காந்தியை, சைதாப்பேட்டை கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர்.

"ராயப்பேட்டை வி.எம் தெருவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு 2017-ம் ஆண்டில் கும்பலாக வந்து மாலை போட்டு பொது அமைதியைக் கெடுத்து விட்டார்" என்று திருமுருகன் காந்தி மீது கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, சைதாப்பேட்டை நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அந்த வழக்கில், திருமுருகன் காந்தியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதுகுறித்து பேசிய மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பிரவீன்குமார், 'ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது கும்பலாகப் போனார், பொது அமைதியைக் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துதான், முதலில் பிரிவு 153-ன் கீழ் காவல் துறை  வழக்குப் பதிவு செய்து வைத்திருந்தனர்.

அந்த வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று திருமுருகன் காந்தி சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே தற்போது திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.இப்போது, அதே விவகாரத்தை பிரிவு 124-ன் கீழ் மாற்றி தேசத்துரோக வழக்காக்கி திருமுருகன் காந்தியை சிறைக்குள் தள்ளி இருக்கிறார்கள். பெரியார் சிலைக்கு மாலை போடுவது கூட தேசத்துரோக வழக்கில் வந்துள்ளது மிகப் பெரிய சமூக ஆபத்து" என்றார்.

செய்திகள்
ஞாயிறு செப்டம்பர் 23, 2018

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.