திருமுருகன் காந்தி உட்பட 4 செயற்பாட்டாளர்களின் விடுதலையை கோருகின்றோம்

June 06, 2017

திரு திருமுருகன் காந்தி உட்பட 4 செயற்பாட்டாளர்களின் விடுதலையை கோருகின்றோம்-தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி, யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு எமது புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் செயற்பட்டுவரும் மே 17 இயக்கமானது சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட  ஈழத்தமிழர்களிற்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை கடந்த மே மாதம் 21ம் திகதி மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் மெரினா  கடற்கரையில் மே  17 இயக்கம் நடத்தி வந்த போதிலும், இந்த ஆண்டு நினைவேந்தலுக்கான அனுமதி காவல்துறையால் மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது. 

நினைவேந்தல் நிகழ்வு செய்ததிற்காக திரு திருமுருகன் காந்தி உட்பட நான்கு செயற்பாட்டாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி மற்றும்  யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை நீதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலாகவே கருதுகின்றது.

நினைவேந்தல் செய்வது அனைத்து மக்களின் உரிமையாகும். தமிழீழத்தில் நினைவேந்தல் செய்வதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் மறுக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இந்த தடையானது ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு  சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த அரசினால் விதிக்கப்படுவது மேலும் கவலையளிக்கின்றது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நான்கு செயற்பாட்டாளர்களையும் உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு அரசை தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி மற்றும்  யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை இவ் அறிக்கையின் ஊடாக உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது.

செய்திகள்
வெள்ளி December 15, 2017

என்றோ ஒரு நாள் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தமிழ்ப் புலிகளின் குரல் ஒலிக்கும்...