திரைப்பட வழிகாட்டி!

ஞாயிறு ஏப்ரல் 01, 2018

திரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. இந்த வரிசையில், ‘வாட் மூவீஸ் ஷுட் ஐ வாட்ச் டுநைட்’ எனும் பெயரிலான இணையதளம், புதிதாகப் பார்க்கக்கூடிய ஆங்கிலப் படங்களைப் பரிந்துரைக்கிறது. 

தளத்தின் முகப்புப் பக்கத்தில், ஸ்வைப் செய்தால், ஒரு படத்துக்கான பரிந்துரை தோன்றுகிறது. அதன் முன்னோட்டக் காட்சியையும் காணலாம். இப்படித் தினம் ஒரு படத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

இணைய முகவரி: https://whatmovieshouldiwatchtonight.com/