திரை உலக முப்பெரும் விழா!

Saturday January 06, 2018

சென்னையில் நடைபெற்ற திரை உலக முப்பெரும் விழாவில் எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் விஜயகாந்த் திறந்து வைத்தார். தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடார்பாளார் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ் ஆனந்தன் பி.ஆர்.ஓ. ஆன 60-வது ஆண்டு நிறைவு, பி.ஆர்.ஓ. யூனியன் பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டுகள் ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவார்களுக்கு விருது வழங்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் வி.பி.துரைசாமி, சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, ஷீலா, ரேவதி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, வெண்ணிறஆடை நிர்மலா, வைஜெயந்தி மாலா, கவிஞர் முத்துலிங்கம், ஆரூர்தாஸ், லதா உள்ளிட்டவர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலையை விஜயகாந்த் திறந்து வைத்தார். நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன்னிலை வகித்தார்.

விழாவில் பெப்சி தலைவார் ஆர்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் விக்கிரமன், அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் சத்யராஜ், இயக்குனார்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், ஆர்.பார்த்திபன், நடிகர் விஜயகுமார், எஸ்.வி.சேகர், விக்ரம்பிரபு, அம்பிகா, சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனார். விழாவில் சங்கர் கணேஷ் இன்னிசை கச்சேரி நடந்தது. அதில் எம்.ஜி.ஆரின் பாடல்கள் பாடப்பட்டன.

அனைவரையும் சங்க தலைவர் டைமண்ட்பாபு, செயலாளார் பெருதுளசி பழனிவேல், பொருளாளார் விஜயமுரளி வரவேற்றனர்.