திவ்யபாரதிக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு

August 09, 2017

கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு தான் தொடர்ந்து ஆதரவளிக்க உள்ளதாக மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.  மதுரையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “வன்முறை மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அம்பேத்கரின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “கக்கூஸ் ஆவணப்படத்தில் இந்த நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டிய திவ்யபாரதி மீது நடவடிக்கைகள் எடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. திவ்யபாரதிக்கு தொடர்ந்து நான் ஆதரவு அளிப்பேன். 

கக்கூஸ் ஆவணப்படம் சாதாரண மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. சாதீய கட்டமைப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்” என்று இரோம் ஷர்மிளா கூறினார்.

அதோடு, தனது திருமணம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

செய்திகள்
வெள்ளி August 11, 2017

இந்தியாவின்  13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.