தீபாவளியைக் கொண்டாட சம்பளத்தை முற்கூட்டி வழங்கக் கோரிக்கை

ஒக்டோபர் 12, 2017

தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு வசதியாக, அரச உத்தியோகத்தர்களின் ஒக்ரோபர் மாத வேதனத்தை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

வழமையாக, ஆசிரியர்களுக்கு 20 ஆம் திகதியும் ஏனைய அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதியும்  சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.   

எனினும், எதிர்வரும் 18 ஆம் திகதி தீபாவளி பண்டிகை என்பதால், அதனைக் கொண்டாடுவதற்கு உதவியாக, இம்மாத சம்பளத்தை மட்டும் முன்கூட்டியே வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.    

பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு தாம் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருப்பதால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.    

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 18, 2018

 சுடரொளியில் இணைந்த பல ஊடகவியலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.