தீபாவளி: சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐ.நா!

வியாழன் நவம்பர் 08, 2018

ஐக்கிய நாடுகள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது. 

இந்த தபால் தலையில், ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் மின்னொளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டட படம் இடம்பெற்றுள்ளது. கடந்த அக்., 19ம் திகதி இந்த தபால்தலை வெளியானாலும், தற்போது தான் ஐநா தலைமை அலுவலகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கும். 

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகையில், தீபாவளி பண்டிகை மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒளி வழங்கும் விழாவாகவும், இந்தியா முழுவதிலும், உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், தீமை ஒழிந்து நன்மை வெற்றி பெறுவதை குறிக்கும் வகையில், விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த நாளில் புது ஆண்டு பிறப்பதாக பல சமுதாய மக்கள் நம்புவதாக கூறியுள்ளது.

தபால் தலை வெளியிட்டதற்காக ஐநா.,வுக்கு, இந்திய தூதர் சையத் அக்பரூதீன் நன்றி தெரிவித்துள்ளார்.