தீ விபத்தில் மூன்று பெண்கள் பலி!

Thursday June 14, 2018

பசறை பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வியாபார நிலையத்தின் பின் பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வியாபார நிலைய உரிமையாளரின் மகள், மனைவி மற்றும் தாய் ஆகியோரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல் துறை  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.