துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய்யா நாயுடு

August 11, 2017

இந்தியாவின்  13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு தேர்வு செய்யப்பட்டார். நாட்டின், 13-வது துணை ஜனாதிபதியாக, வெங்கைய்யா நாயுடு, இன்று பதவி ஏற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், இன்று காலை டெல்லியின் ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் வெங்கைய்யா நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, தீன் தயாள் உபத்யாய் சிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செய்திகள்