துப்பாக்கி சூட்டில் ரஷ்ய தூதர் பலி

செவ்வாய் டிசம்பர் 20, 2016

துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டுக்கான ரஷ்யத் தூதர் ஆண்ட்ரெய் கார்லோவ் பலியானார். அங்காரவின் கேன்கயா மாவட்டத்தில் நடந்த கலை கண்காட்சியை பார்வையிட கார்லோவ் நேற்று(19) சென்றார். அப்போது, மர்ம நபர்கள் சிலர்,  துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டனர்.

 அதில், படுகாயம் அடைந்த கார்லோவ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அலெப்போ நகரில்  இருந்து மக்களை வெளியேற்றுவதில் ரஷ்யாவும், துருக்கியும் இணைந்து தீவிரமாக உதவி வருகின்றன. 

அலெப்போ விவகாரத்தில் ரஷ்யா அனாவசியமாக தலையிடுவதை கண்டித்து, எதிர்ப்பாளர்களால் அங்காராவில் சில தினங்களுக்கு முன்  போராட்டம் நடந்தது.  அதன் தொடர்ச்சியாக ரஷ்யத் தூதர் தாக்கப்பட்டு இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை  சுட்டுக் கொன்றோம் என துருக்கி அரசு சுருக்கமாக கூறியுள்ளது. 

தீவிரவாதிகள் சுட்டதில், கார்லோவ் இறந்ததாக, வெளியுறவுத்துறை   செய்தித்தொடர்பாளர் மரியா சகாரோவா அறிவித்து உள்ளார்.