துரோகத்தினால் கைமாறும் மட்டக்களப்பு மாவட்டம் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

Sunday November 19, 2017

நாட்டில் தற்போது வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துவரும் நிலையில், வடக்கு கிழக்கு தமிழர்களைப் பொறுத்தவரையில் என்றும் போலவே இன்றும் சிறீலங்கா அரசியல் பாதீட்டுத் திட்டத்தை மக்கள் அவதானிக்கின்றனர். எந்தொரு நன்மையும் அளிக்கப்போவதில்லை. மாறாக வாழ்க்கைச் சுமையும், மக்களின் படுகடனின் அளவையும்தான் அதிகரிக்கப் போகிறது என்பது மக்களின் கருத்தாகவுள்ளது.

சிறீலங்காவை ஆட்சி செய்யும் சிங்கள பேரினவாத சக்திகள் மக்களின் ஜனநாயகத்திற்கான கருத்துக்களை உள்வாங்காத வரைக்கும் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது. கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மக்களை ஏமாற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தியனர். ஆனால், நடைமுறையில் நாளாந்தம் பொருட்கள் சேவைகளுக்கான விலை மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டே சென்றன.

கொழும்பு அரசாங்கத்தின் பாதீட்டுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் பாதிப்படையாதுவிட்டாலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர். ஒரு பக்கம் பொருட்களின் விலை அதிகரிப்பு, மறுபுறத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியுள்ளது.

பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவில் மதம் சார்ந்த அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதென்பது, இந்த நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மையினரை அடக்கிவைக்க வேண்டும் என்ற தீவிரவாதப் போக்கைக் காட்டுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்றைய நிலையில், வாழ்வா? சுVவா? என்ற இரண்டுமில்லாத நிலையில் தமிழர் வாழ்நாளை செலவு செய்கின்றனர். மக்களின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கத்தக்கதாக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்த் தலைவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தை உயர்த்திக் காட்டுவதற்காக, சிறீலங்காவின் பாதீட்டுக்கு கும்பிடுபோட்டு வரவேற்கின்றனர்.

தமிழர்களுக்கு தற்போது எழுந்துள்ள காணாமல்போன உறவுகள் பற்றிய தகவல்கள், சிறையில் வாடும் அரசியல் கைதிகள் பிரச்சினை, படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிப் பிரச்சினை, மீள்குடியேற்ற பிரச்சினை என சொல்ல முடியாதளவுக்கு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறக் கூட ஆள்யில்லாத நிலையில் உள்ளூராட்சி தேர்தல் பற்றிய கருத்துக்கள் தற்போது சூடு பிடித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் இன்னும் மாற்றினத்தின் அடிமைகாளாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அரசியல் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலரினால் ஏற்பட்டுள்ளது. இது அரசியலில் ஆரம்பக்கட்டமாக இருந்தா லும் கிராம மட்டத்தில் ஒரு அரசியல் கட்சியின் பலத்தைத் தீர்மானிக்கும் தேர்த லாக இது கருதப்படும். 2018ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் கட்சி சார்பாக வேட்பாளர் பெயர்ப்பட்டியல் போடும் நடவடிக்கை மும்முரமாக இடம்பெற்றவரும் நிலையில், யானைக் கட்சியின் தலைமையில் போட்டிபோடும் தமிழ் தரப்பினர் மாற்றினத்தின் தலைமையின் கீழ் சென்ற தமிழர்களை அடமானம் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என காத்தான்குடியைச் சேர்ந்த பிரதியமைச்சர் தெரிவிக்கின்றார், மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் பார்பாக போட்டியிடும் தமிழர் தரப்பு வேட்பாளர்களை மற்றொரு ஓட்டமாவடியைச் சேர்ந்த பிரதியமைச்சர் தெரிவு செய்கின்றார். இதனால் மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

இவ்வாறான மாற்றின அரசியல் தலைமையின் கீழ் அரசியல் தேவைக்காகச் சென்று தமிழர்களை வாக்குகளை அடமானம் வைக்க முன்வந்துள்ள முன்னாள் பிரதி அமைச்சரான கணேசமூர்த்தி மற்றும் மூச்சுக்கு முன்றூறு தடவை தேசியம் பற்றிப் பேசிய ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள் பேரினவாத சக்திகளிடமும், மாற்றின தலைமைத்துவத்தின் கீழும் தமிழர்களை அடகுவைக்க நினைப்பதன் நோக்கம் என்ன? அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் சம்பந்தன் தலைமையிலான உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை பார்த்துக் கொண்டு மெளனமாக இருக்கும் நிலையில், பேரினவாத சக்தி அதுவும், தமிழர்களின் போராட்டங்களை சிதைத்த கட்சிகளுடன் இணைந்து எதனைத் சாதிக்கப் போகின்றார்கள்.

யுத்தகாலத்தில் தமிழர்கள் சிங்கள இனத்தவர்களினால் பாதிக்கப்பட்டனர். தற்போது யுத்தம் முடிவுற்ற பின்னர் நல்லிணக்க அரசாங்கத்தில், சகோதர இனம் எனக் கூறப்படும் முஸ்லிம்களினால் குறிப்பாக மட்டக்களப்பு தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த செலுத்த முஸ்லிம் தலைக்கு இத்தேர்தலை ஒருத் துருப்புச் சீட்டாக பயன்படுத்த எத்தனிக்கும் இத்தரப்பினருக்கு வக்காளத்துவாங்க ஒரு சில தமிழர்கள் கொல்லப்புறத்தினால் உள்நுழைவதற்கு செயற்பட்டுவருகின்றனர். எப்படியாவது ஒரு பதவி கிடைத்தால் சரி என்று தலையாட்டி பொம்மைகளாக செயற்படுகின்றனர். காரணம் இவர்கள் எல்லாம் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய பேசியவர்கள், நாட்டைவிட்டு ஓடியவர்கள் என்பதனால் இவர்களால் வாய்திறக்க முடியவில்லை. பேரினவாத சக்திகளும், முஸ்லிம் தரப்புக்களும் போடும் எழும்புத் துண்டுக்காக எதனையும் கண்டுகொள்ளாது செயற்படுகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சமனாக வளர்ச்சியடைய வேண்டும் என மட்டக்களப்பில் ஐக்கிய தேசிய கட்சி வளர்ச்சியடை பலதரப்பினரையும் பயன்படுத்திவருகின்றனர். சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில் தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக சிங்கள பேரினவாத சக்திகளுடன் இணைந்து பல்வேறு சதிவேலைகளை செய்து இறுதியில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற கணேசமூர்த்தி போன்றவர்கள் மீண்டும் சிங்களப் பேரினவாத சக்திகளுடன் இணைந்து எதனைச் சாதிக்கப் போகின்றார். தமிழ் இனத் துரோகியாக இனங்காணப்பட்டவர்கள் மீண்டும் ஒருமுறை வரலாற்றுத் துரோகத்தை செய்வதற்காக களமிறங்கத் தயாராகின்றார்களா?

அவ்வாறு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பசுத் தோல் போர்த்த புலியாக செயற்பட்ட ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள். தேசியம், சுயநிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு என்றெல்லாம் சொல்லியது வெறும் ஏமாற்றுவித்தை என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. தமிழ் இனத்திற்காக போராடுகின்றேன் என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களை ஏமாற்றியது மட்டுமல்லாது, குறிப்பாக வெளிநாட்டில் தமிழ் இன செயற்பாட்டாளர்களை காட்டிக் கொடுத்ததிலும் பெரும்பங்காற்றியுள்ளாVர் என்பது புலனாகிறது.

இவர் வெளிநாட்டில் இருந்த காலங்களில் இரண்டரை ஆண்டு காலம் தமிழின எழுச்சி நடவடிக்கைகள் எதிலும் பங்குபற்றாது மறைந்து வாழ்ந்து கொண்டு அச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எதிரிக்கு இனங்காட்டிக் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு துரோகத்தை செய்த விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் நூற்றுக் கணக்கான தமிழர்களை படுகொலை செய்த பிள்ளையானுக்கும் சில முக்கியமான புலனாய்வு வேலைகளை செய்துவந்துள்ளார். அதற்கு வெகுமதியாக அவர் வெளிநாட்டிலிருந்து சிறீலங்கா வந்த போது சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்கள் அவரை வரவேற்று அவரின் ஊரான வாழைச்சேனைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர்.

ஒரு இனத்தின் புனிதமான விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி, துரோகத்தனமாக காட்டிக் கொடுப்புக்களையும் மேற்கொண்டுவிட்டு, தற்போது மாற்றினத்திடம் மண்டியிட்டு தமிழர்களை அடமானம் வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ் இனம் அடிமைப்பாட இனம் மட்டுமல்ல, என்றும் தலைநிமிர்த்து வீறுநடை போடும் இனம். எனவே இவ்வாறானவர்களுக்குத் தக்க பாடத்தைச் சரியான நேரத்தில் மக்கள்தான் புகட்டவேண்டும்.

நன்றி: ஈழமுரசு