துரோகி பிள்ளையானுக்குப் புகழாரம் சூட்டும் ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணை ஒட்டுக்குழுவின் அமைப்பாளர்!

திங்கள் நவம்பர் 12, 2018

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பிரதேசத்தின் காட்டுப்புறத்தில் உள்ள மாட்டுப்பண்ணை ஒன்றில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கி வரும் புலம்பெயர் சிங்கள ஒட்டுக்குழுவான கே.பி கும்பலின் அமைப்பாளர்களின் ஒருவரான வாமன் என்பவர், பிள்ளையானுக்குப் புகழாரம் சூட்டும் காணொளி சங்கதி-24 இணையத்திற்கு கிடைத்துள்ளது.

 

ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் மருத்துவராகப் பணிபுரிந்து இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த இவரது விடுதலைக்கு இவரது நண்பரான துரோகி பிள்ளையான் உதவி புரிந்ததாக முன்னர் தகவல்கள் வெளிவந்திருந்தன.

 

இந்நிலையில் பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், துரோகி பிள்ளையானைத் தனது நண்பர் என்று இவர் விளிக்கின்றார்.

 

அத்துடன் பிள்ளையான் தென்தமிழீழ மக்களுக்கு பல சேவைகள் செய்தவர் என்றும், அதனால் அவருக்குத் தென்தமிழீழ மக்களிடம் நன்மதிப்பு உண்டு என்று வாமன் என்றழைக்கப்படும் ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணை ஒட்டுக்குழுவின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

கட்டாய சிறுவர் ஆட்சேர்ப்பு உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக பிள்ளையான் குழு மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையில் ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

UN

அத்துடன் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பிள்ளையானுக்குச் சொந்தமானது என்று 2016ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

US

இந்நிலையில் பிள்ளையானைப் புனிதராக்கும் வகையில் வாமன் என்ற ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணை ஒட்டுக்குழுவின் அமைப்பாளர் வழங்கியிருக்கும் செவ்வி, சிங்களத்தின் ஒட்டுக்குழுவாகவே ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணையில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பல் செயற்படுகின்றது என்பதை உறுதி செய்வதாகப் பிரித்தானியாவில் பணிபுரியும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

Vaman Video