தூக்க குறைபாடு மட்டும் அல்ல, அதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம்!

Saturday September 01, 2018

இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் தூங்குவதாலும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகள் மூலம் குறைவாக தூங்குவதால் இதயநோய் வருவது போன்று தொடர்ந்து அதிகமாக தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆய்வின்படி, குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாக தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் அதாவது 3 மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.