தென்­ப­கு­தி­யி­லுள்ள அர­சியல் தலை­வர்கள் விக்கியிடம் பாடம் படிக்க வேண்டும்!

June 19, 2017

தென்­ப­கு­தி­யி­லுள்ள அர­சியல் தலை­வர் கள் யாழ்தேவியில் யாழ்ப்­பாணம் சென்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ர­னிடம் பாடம் படிக்க வேண்டும் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய அவர் இது­கு­றித்து மேலும் தெரி­வித்­த­தா­வது,

வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக தெற்கில் சிங்­கள பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள் பெரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். அவரை திட்டித் தீர்த்­தனர். அவரை பிரி­வி­னை­வாதி என்றும் பயங்­க­ர­வாதி என்றும் புலி என்றும் குற்­றம்­சாட்­டினர். ஆனால் வட­மா­காண முத­ல­மைச்சர் தற்­போது மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்கை சக­ல­ருக்கும் முன்­னு­தா­ர­ண­மாக திகழ்­கின்­றது.  வட­மா­காண சபை­யி­லுள்ள நான்கு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. இத­னை­ய­டுத்து முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் குற்­றச்­சாட்­டுக்­களை கண்டு மௌன­மாக இருக்­க­வில்லை. கண்­டும் ­கா­ணா­மலும் இருக்­க­வில்லை. விசா­ரணைக் குழு­வொன்­றினை அமைத்து உரிய கால எல்­லைக்குள் விசாரணை அறிக்­கையை பெற்று தற்­போது அதற்­கான தீர்ப்­பையும் வழங்­கி­யுள்ளார்.

இரண்டு அமைச்­சர்­களை வீட்­டுக்குப் போகு­மாறு கூறி­யுள்ள அவர் மற்­றைய இரண்டு அமைச்­சர்கள் மீதும் முழு­மை­யான விசா­ரணை நடை­பெறும் என்றும் அது­வரை விடு­மு­றையில் வீட்­டுக்குச் செல்­லு­மாறும் பணித்­துள்ளார். இவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு அவ­ருக்கு அதி­காரம் இருக்­கின்­றதா இல்லை யா என்­பதை விவா­திப்­பதில் பிர­யோ­சனம் இல்லை. அது சட்டப் பிரச்­சி­னைக்கு உட்­பட்­ட­தாகும். ஆனாலும் ஜன­நா­யக ரீதியில் அர­சியல் ரீதி­யாக அவ­ருக்கு அந்த உரிமை இருக்­கின்­றது. விக்கி­னேஸ்­வ­ரனின் இத்­த­கைய செயற்­ப­டா­னது ஏனைய மாகாண சபை­க­ளுக்கும் அமைச்­சர்­க­ளுக்கும் தென்­ப­குதி அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் சிறந்த உதா­ர­ண­மாக திகழ்­கின்­றது.

இதனால் யாழ்தேவி பிடித்து யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கினேஸ்வரனிடம் தென் பகுதி அரசியல் தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும். விக்கினேஸ்வரனின் நடவடி க்கை காரணமாகவே மக்கள் அவர் பக்கம் நிற்கின்றனர். மனோ கணேசனான நானும் இதனால்தான் அவர் பக்கம் இருக்கின்றேன் என்றார்.

செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

இதுவரை சிங்களவர்களுக்கு எதிரானவர் எனப் பார்க்கப்பட்ட அவர் இப்போது தமிழர்களுக்கு ஆபத்தானவராக மாறிவிட்டார்...