தென் கொரிய அதிபர் தேர்தலில் பான் கீ மூன் போட்டியிடுவாரா?

சனி டிசம்பர் 17, 2016

ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் (Ban Ki Moon) தென் கொரிய அதிபர் தேர்தலில் தாம் போடியிடலாம் என கோடிகாட்டியுள்ளார். அவரின் பதவி காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. சிறிது கால ஓய்வுக்குப் பிறகு தாம் தென் கொரியா திரும்பவிருப்பதாக அவர் அறிவித்தார்.

அங்கு சென்ற பிறகு தம் நாட்டுக்கு எவ்வகையில் சிறப்பாக உதவ முடியும் என்பதைக் கருதிப் பார்க்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  தென் கொரிய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

இருப்பினும் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருக்கும் தென் கொரிய அதிபர் பார்க் குவென் ஹே (Park Geun-hye) பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முடிவுக்கு உடன்பட்டு நாட்டின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இரண்டு மாதத்தில் அதிபர் தேர்தல் நடந்தாகவேண்டும்.