தெற்­கில் எந்த அர­சி­லும் அங்­கம் வகிப்பதில்லையாம்!

Wednesday February 14, 2018

தமிழ் மக்­க­ளின் ­வாக்­களை நிறை­வேற்­றக் கூடிய அர­சி­யல் தீர்வு கிடைக்­கும் வரை­யில், தெற்­கில் எந்த அர­சி­லும் அங்­கம் வகிப்­ப­தில்லை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறு­தி­யான, திட­மான தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது.

கொழும்பு அர­சி­ய­லில், கூட்டு அர­சின் ஆட்சி முடி­வுக்கு வந்து தனிக் கட்சி ஆட்சி உரு­வா­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்சி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து ஆட்சி அமைக்­கக் கூடும் என்று பர­வ­லான கருத்­துக்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்­தப் பின்­ன­ணி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்­றுக் கூடி ஆராய்ந்­த­னர். இலங்கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா, அந்­தக் கட்­சி­யின் பொரு­ளா­ளர் பொ.கன­க­ச­பா­பதி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்தி­ரன், ரெலோ அமைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன், அந்­தக் கட்­சி­யின் செய­லர் ந.சிறீ­காந்தா, புளொட் அமைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்­தன், அந்­தக் கட்­சி­யின் உறுப்­பி­னர் ராக­வன் ஆகி­யோர் கூட்­டத்­தில் கலந்து கொண்­ட­னர்.

‘தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை நிறை­வேற்­றக் கூடிய அர­சி­யல் தீர்வு கிடைக்­கும் வரை­யில் தெற்­கில் எந்த அர­சி­லும் அங்­கம் வகிப்­ப­தில்லை என்று கடைப்­பி­டித்து வரும் கொள்­கையை தொடர்­வோம். தீர்வு விட­யங்­க­ளில் தெற்­கில் ஆட்­சி­பீ­ட­மே­றும் அர­சு­க­ளுக்கு அழுத்­தங்­க­ளை­யும் நெருக்­க­டி­க­ளை­யும் கொடுப்­போம். அர­சி­யல் தீர்வு, தமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட விட­யங்­க­ளில் தெற்கு அரசு முன்­னெ­டுக்­கும் முயற்­சி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வோம்’ என்று அந்­தக் கூட்­டத்­தில் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­துள்­ளது.