தேக்கம் காடுகளை அழித்து முஸ்லிம் குடியேற்றத்திற்கு எதிராக முல்லையில் திரண்டது இளைஞர் படை

யூலை 16, 2017

முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காடுகளை அழித்து முஸ்லிம் குடியேற்றங்களை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா அமைச்சர் ரிசாத் பதியுதீன் எடுத்து வருகின்ற மோசடியான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி இன்று காலை நடைபெற்றது. 

முல்லைத்தீவு கூழாமுறிப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தேக்கம் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு சிங்கள அரசின் விசுவாச அமைச்சரான ரிஷாத் பதியுதீன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். 

இந்தச் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று பேரணி இடம்பெற்றது. முல்லைத்தீவு காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி கூழாமுறிப்பு வரை இடம்பெற்றது. 

இந்தப் பேரணியில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். 

இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வெளிப்படையாகக் கோஷங்களை எழுப்பினர். 

எமது காடுகளை அழிப்பதற்கு ரிஷாத் யார்? அழிக்காதே அழிக்காதே தேக்கம் காடுகளை அழிக்காதே, எமது காடுகள் உனது சொத்தா?, மீள்குடியேற்றத்திற்கு நாம் எதிரல்ல, திட்டமிட்ட குடியேற்றங்களுக்கே எதிர்ப்பு போன்ற கோஷங்களை எழுப்பினர். 

 

இணைப்பு: 
செய்திகள்