தேசத்தின்குரலின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்கம்!

Tuesday December 18, 2018

எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை  தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சி மிகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் தென் மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்றது. (16-12-18)

 பொதுச்சுடரை திருமதி விஜயராணி கிருஸ்ணராஜா ஏற்றி வைத்தார்.தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு சி.செல்வக்குமரன் ஏற்றிவைத்தார். ஈகச்சுடரினை  லெப் கேணல் விந்தனின் சகோதரர் திரு மகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். 

மலர்வணக்கத்தை தொடர்ந்து எழுச்சிப் பாடல்கள் இடம்பெற்றன.திரு மகேந்திரன் அவர்கள் பாலா அண்ணாவின் வரலாற்றுப்பதிவுகள் பற்றி சிறப்புரையாற்றினார். சமகால அரசியல் தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறையை சார்ந்த திரு சதா உரையாற்றினார் . நிறைவாக தமிழீழ தேசியக்கொடி கையேந்தலுடன் நினைவு வணக்க நிகழ்ச்சி நிறைவுபெற்றது.