தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவார்ந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

புதன் மார்ச் 09, 2016

தமிழீழத் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினரால் 4ஆவது தடவையாக Hosans நகரில் நடாத்தப்பட்டது. முதல் நிகழ்வாக திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைசுடரேற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

 தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவார்ந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 26 கழகங்கள் போட்டியிட்டன.விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டிகளில் வீரர்கள் மிகவும் உற்சாகமாக விளையாடியதைக் காணக்கூடியதாக இருந்தது. வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்கட்டதுடன். இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகை மந்திரத்தோடு இனிதே நிறைவுபெற்றது. 

1ஆம் இடம் :- Samurai
2ஆம் இடம் :- Frindrs 1
3ஆம் இடம் :- Red Phønex
சிறந்த இளைய விளையாட்டுவீரன் :- மதுசன் (Rander Yong Star)
சிறந்த விளையாட்டுவீரன் :- கபிலன்