தேசத்துரோக வழக்கு பதிவு செய்து திருமுருகன் காந்தி கைது!

Thursday August 09, 2018

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி,  இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் இடம்பெற்ற, ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை  உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பேசிவிட்டு இன்று அதிகாலை நோர்வேயிலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.