தேசியத்தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

செவ்வாய் ஏப்ரல் 03, 2018

தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

 விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை ‘குப்பி’ இயக்குநர் ரமேஷ் திரைப்படமாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கான வேலைகளை அவர் தொடங்கிவிட்ட நிலையில், இன்னொருவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
 
 ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.வெங்கடேஷ் குமார். இவர்தான் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

 தன்னுடைய ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்றும் வெங்கடேஷ் குமார் கூறியுள்ளார்.