தேசிய அரசியலில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது!

Wednesday February 14, 2018

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், தேசிய அரசியலில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு, புதிய ஒருவரைப் பிரதமராக நியமிக்குமாறும், புதிய அரசாங்கமொன்றை ஆட்சி​பீடமேற்றுமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், இலங்கை வரலாற்றில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், பிரதமரும் அரசாங்கமும் மாற்றப்பட்டமை, இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.