தேசிய புலனாய்வு முகமைக்கு தலைமை அலுவலகம்!

ஒக்டோபர் 08, 2017

தீவிரவாத வழக்குகளை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமைக்கான தலைமை அலுவலகத்தை நாளை மறுநாள் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார்.

தீவிரவாதம் தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரிக்க 31.12.2008 அன்று தேசிய புலனாய்வு முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கென சொந்த கட்டிடம் இல்லை என்பதால் புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடம் டெல்லி லோதி சாலையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்றன. இதற்காக சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சதுர அடியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற விழாவில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு இந்த அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், லோதி சாலையில் கட்டப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கான தலைமை அலுவலகத்தை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அக்டோபர் 10-ம் தேதி திறந்து வைக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்
ஞாயிறு செப்டம்பர் 23, 2018

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.