தேர்தலுக்கு பொறுப்பாக சீ.டீ. விக்ரமரத்ன!

December 06, 2017

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல் துறை மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

சீ.டீ. விக்ரமரத்ன நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்  காவல் துறை மா அதிபராக கடமையாற்றும் அதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்  காவல் துறைமா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு முன்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்  காவல் துறை மா அதிபராக பணியாற்றிய காமினி நவரத்ன அண்மையில் ஓய்வு பெற்றமை கூறத்தக்கது.

செய்திகள்
வெள்ளி December 15, 2017

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று(14) ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது.