தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 167 பேர் கைது!

Sunday January 14, 2018

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

அவர்கள் கடந்த 09 ம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே கைது செய்யப்படுள்ளனர்.  தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 55 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்றை தினம் (13) மட்டும் தேர்தல் சட்டங்களை மீறிய 13 முறைப்பாடுகள் தொடர்பாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.