தேர்தல் பிரசாரங்கள் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட க்கூடாதது - இராதாகிருஸ்னண்

Monday August 03, 2015

நாளை (04.08.2015) ஆரம்பமாகின்ற க. பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 


2015 ஆம் ஆண்டிற்கான கா.பொ.த உயர்தர பரீட்சை வழமை போல இந்த வருடமும் நாடு பூராகவும் ஆரம்பமாகின்றது. இந்த காலப்பகுதியில் எமது நாட்டின் பாராளுமன்ற பொதுத் தேர்ததல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி பரீட்சை நடைப்பெறுகின்ற பாடசாலைகளுக்கு அருகாமையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுப்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


எமது நாட்டின் எதிர் கால தூண்களாக கருதுகின்ற மாணவச் செல்வங்கள் எந்த விதமான இடையூறுகளுமின்றி  பரீட்சைக்கு தோற்றுவதை நாம் உறுதிச் செய்ய வேண்டும். தேர்தல் பிரசார கூட்டங்களுக்காக பேரூந்துகளை பெற்றுக் கொள்ளும் வேட்பாளர்கள் மாணவர்களுக்கான போக்குவரத்து தடையின்றி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதை உறுதிச் செய்துக் கொண்டு தங்களுக்கான பேரூந்துகளை இ. போ. ச ஊடாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பீர்களாயின் அது மாணவர்களின் போக்குவரத்தை பாதிக்காமல் இருக்கும்.

 


பரீட்சை நடைப்பெறும் பாடசாலைகளுக்கு அருகாமையில் பொது கூட்டங்களை நடாத்துவதையோ, தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதையோ தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.